Mobile

அமெரிக்காவில் களம் இறங்கிய ZTE Blade X1 ஸ்மார்ட்போன்!!

ZTE நிறுவனம் தற்போது ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்த ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2,340×1,080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

ZTE பிளேட் எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

அமெரிக்காவில் களம் இறங்கிய ZTE Blade X1 ஸ்மார்ட்போன்!!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி tertiary சென்சார், 2எம்பி quaternary சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

மேலும் குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, கைரேகை சென்சார் போன்றவற்றினையும் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி!!

TechNews Tamil

IFA 2019 அறிமுக நிகழ்வில் வெளியாகும் நோக்கியா 7.2!

TechNews Tamil