ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ZTE பிளேட் வி 2021 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பேண்டஸி ப்ளூ, ஸ்பேஸ் க்ரே மற்றும் ஸ்பேஸ் சில்வர் போன்ற வண்ணங்களில் வெளியாகி உள்ளது.
ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவினைக் கொண்டு இருக்கும்.

ZTE பிளேட் வி2021 5ஜி முன்புறத்தில் ஒற்றை செல்பி ஷூட்டரைக் கொண்டு இருக்கும். பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டு இருக்கும்.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எஃப்எம் ரேடியோ, பேஸ் அன்லாக் சென்சார் வசதியினை 5ஜி ஆதரவினைக் கொண்டுள்ளது.
ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டு இருக்கும், மேலும் 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தினைக் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சாரினைக் கொண்டு இருக்கும்.
ZTE பிளேட் 20 5 ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கும், மேலும் ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கும்.