Mobile

அமெரிக்காவில் களம் இறங்கியது ZTE Blade 20 5G ஸ்மார்ட்போன்!!

அமெரிக்காவில் ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இந்த  ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜாஸி க்ரே, லைட் ப்ளூ மின்ட் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.

ZTE பிளேட் 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் டிஸ்ப்ளே 720×1,600 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் களம் இறங்கியது ZTE Blade 20 5G ஸ்மார்ட்போன்!!

ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை ZTE பிளேட் 20 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் கொண்டும் உள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ யு20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரெட்மி கே 30 யில் யாரும் எதிர்பார்க்காத அம்சம்!!

TechNews Tamil

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

TechNews Tamil