Mobile

சீனாவில் வெளியான ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ZTE நிறுவனம் தற்போது சீனாவில் ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.92 இன்ச் FHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பு, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1,080×2,400 பிக்சல் தீர்மானம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் வெளியான ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன்!

இயங்குதளம் என்று கொண்டால் மைஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5 ஜி, வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் புளூடூத் வி 5.1 கொண்டுள்ளது.

Related posts

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ளது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

களமிறங்கத் தயார் நிலையில் கேலக்ஸி எஸ்20!!

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ ஒய்51 (2020) ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil