கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம் செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டுள்ளது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசுகின்றனர்.
இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வருகின்றனர்.
அதாவது ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூம் செயலியையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது ஜூம் வீடியோ சந்திப்புகளில், அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. தைவானும், ஜெர்மனியும் ஏற்கனவே ஜூம் செயலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஆல்பாபெட்டின் Google ஜூம், டெஸ்க்டாப் பதிப்பை கார்ப்பரேட் மடிக்கணினிகளில் இருந்து தடை செய்துள்ளது.
தற்போது, ஜூம் பயன்பாட்டால் மற்றுமொரு பிரச்சினை கிளம்பியுள்ளது, அதாவது சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஜூம் செயலியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல அதனால் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது.