ஊரடங்கு உத்தரவின் காரணமாக பால், மளிகை, மருந்துக் கடை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டுமே பெரும்பாலான இடங்களில் திறந்திருக்கும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பயனர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க திணறிவரும் நிலையில், அமேசான், ப்ளிப்கார்ட் உட்பட அனைத்து ஷாப்பிங்க் தளங்களும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றன.
மேலும் சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் தற்போது அத்தியாவசியப் பொருட்களை பேடிஎம் போன்றவற்றுடன் இணைந்து செய்து வருகிறது.

மார்ச் மாதம் கேரளாவில் சொமோட்டோ அதன் சேவையினை துவக்கிய நிலையில், தற்போது இந்தியாவின் 80 நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோக சேவைகளை தொடங்கியுள்ளது.
கேரளாவை அடுத்து சென்னையிலும் அடுத்த வாரத் துவக்கத்திற்குள் சொமோட்டோ மற்றும் ஸ்விக்கி இவற்றின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சொமேட்டோ பயனர்கள் ஹோம்ஸ்கிரீனில் உள்ள சந்தை பிரிவு என்னும் ஆப்சன் மூலம் மளிகை விநியோகத்தை வாங்கலாம்.
சொமேட்டோ நிறுவனம் மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப்பை இன்னும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்த நீட்டிப்பானது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.