இந்தியாவில் கொரோனாத் தொற்று மார்ச் மாதம் கால் பதித்த நிலையில், தற்போது கொரோனாத் தொற்று லட்சங்களைத் தாண்டியதாக உள்ளது. 5 கட்டங்களாக ஊரடங்கு மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது கொரோனாத் தாக்கம் இல்லாத இடங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோட்டல்கள் செயல்படுதல், பேருந்துகள் இயக்கும் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் உணவு டெலிவரி நிறுவனங்களான ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் டிரோன் விமானங்கள் மூலம் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய அனுமதி கேட்ட நிலையில், சோதனை விற்பனைக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

டிரோன்களின் மூலம் உணவினையோ/மளிகைப் பொருட்களையோ கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்க முடியும்.
அமேசான் ட்ரோன் சோதனையை அமெரிக்காவில் செய்துவரும் நிலையில், இந்தியாவிலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது சிறப்பான விஷயமாகும். மேலும் இதன்மூலம் வேலைவாய்ப்பினை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.
டிரோன் டெலிவரி சோதனை செய்யும் நிறுவனங்கள் தங்களின் கான்செப்ட் விவரங்கள் குறித்து இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.