கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
பால், மளிகை, மருந்துக் கடை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் வெளியில் சென்று அடிக்கடி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் அமேசான், ப்ளிப்கார்ட் உட்பட அனைத்து ஷாப்பிங்க் தளங்களும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றன.

சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வீடு வீடாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் வகையில் சொமேட்டோ நிறுவனத்திடம் கேரள அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதாவது கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் பிரதமர் மோடி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவை அடுத்து கேரள அரசு அதிக கொரோனா பாதிப்பிற்குரியவர்களைக் கொண்டுள்ளது.
அந்தவகையில் பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை, சொமேட்டோ ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்குவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.