ஆன்லைன் உணவு டெலிவிரி ஆப்களில் முன்னணியில் இருக்கும் சொமேட்டோ, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
சொமேட்டோ, தனது கோல்டு வாடிக்கையாளர்களின் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது.
தற்போது சொமேட்டோவுக்கு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லெபனான், துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் 12.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனம் ஒரு புதிய முயற்சியினை மேற்கொண்டு மற்றுமொரு துறையில் கால் பதிக்கிறது, அதாவது கிரெடிட் கார்டு துறையில் எடிஷன் கார்டு என்ற ஒரு கார்டினை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
சொமேட்டோ நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் முறையினை செயல்படுத்த உள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த கிரெடிட் கார்டு முறையிலும் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில் பலவிதமான அசத்தலான திட்டங்களை அறிவித்து வருகின்றது.
இந்த கார்டினைக் கொண்டு சொமேட்டோ ஆப் வழியாக ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும் போது 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.