ஜொமாட்டோ, தனது சேவையை 100 நகரங்களுக்கு ஜூன் மாதம் நீட்டித்திருந்தது. இதுவரை 300 நகரங்களில் செயல்பட்டுவரும் ஜொமாட்டோ சேவை மிக அதிக அளவில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள நகரங்களில், மொத்தம் 40 நகரங்கள் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகையை கொண்டுள்ளது, 380 நகரங்கள் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகையை கொண்டுள்ளது.

ஊபர் ஈட்ஸ், ஸ்விக்கி என பல ஆப்கள் வந்தாலும், அதனை அடித்துக் கொள்ள இயலாத வகையில் ஜொமாட்டோ ஆஃபர்களுடன் சிறப்பான சேவையினை வழங்கி வருகிறது.
தற்போது இன்னும் கூடுதலாக 40 நகரங்களுக்கான சேவை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் பலரும் தங்கள் நகரத்திற்கு வருமா என்ற ஏக்கம் மற்றும் ஆவலில் உள்ளனர்.
ஒவ்வொரு நகரங்களிலும் 40 முதல் 50 உணவகங்களை, தங்கள் சேவையில் இணைத்துள்ளது.
முதலில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 70 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும், 24 நாடுகளில் 1.4 மில்லியன் உணவகங்களை தன் நிறுவனத்தில் இணைத்து வைத்துள்ளது.