ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸினை வெளியிட்டுள்ளது. இந்த ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 22 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குவதாக உள்ளது.
ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் ஆனது புளூ மற்றும் ட்ரூ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இது IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் வசதியினைக் கொண்டதாகவும், சிறப்பான வாய்ஸ் காலிங் அனுபவத்தை கொண்டதாகவும் உள்ளது.

இது வயர்லெஸ் மியூசிக் தரத்தைக் கொண்டதாக உள்ளது. ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் 40 எம்எம் டிரைவர்களைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வசதியினைக் கொண்டதாக உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஆறு மணி நேரத்திற்கு பேக்கப் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 16 மணி நேர பேக்கப் கொண்டதாக உள்ளது.