Apps

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக Zee5 செயலி!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்திக்கும் ஒரு செயலியாகவும் இருந்து வருகின்றது.

இதற்கு இடைக்காலத் தடைவிதிப்பு என்ற ஒன்று பழகிவிட்டது என்று கூட கூறலாம். கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வரை வழங்கப்பட்டு வந்தநிலையில் சமீபத்தில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதுடன்  ஒரு நட்சத்திர குறியீட்டுக்கு மாறியுள்ளது.

மேலும் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவி வருகின்றது. அந்தவகையில் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட 52 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக Zee5 செயலி!!

அந்த வகையில் சீனாவின் டிக்டாக் செயலியினையும் பலரும் தொடர்ந்து தங்கள் மொபைலில் இருந்து நீக்கி வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் பலர் டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் #BanTikTok என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

2 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் ஜீ நிறுவனத்தின் Zee5 செயலி களம் இறக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த செயலியானது ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலி பீட்டா வெர்ஷன் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையில் களம் இறங்கும் இந்த செயலி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெறும் என்று கூறப்படுகிறது.

Related posts

இனி வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாட்களை Forward செய்ய முடியும்!!

TechNews Tamil

இனி வீடியோ காலிங்கில் 8 பேர் வரை பங்கேற்கலாம்… வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம்!!

TechNews Tamil

1196 பேஸ்புக் அக்கௌண்ட்டுகளை திடீரென நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil