Apps

ஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொழுதுபோக்குவது சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில்தான், அந்தவகையில் அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தும், ஒரு செயலியாக இருப்பது யுடீயூப் ஆகும்.

முன்பு இதனை ஒரு பொழுதுபோக்கும் சாதனமாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பலரும் இதனை தங்களுக்கான வேலைவாய்ப்பாகப் பார்க்கின்றனர். அதாவது வணிகம், சினிமா, அரசியல் என ஊடகங்களைத் தவிர்த்து இந்த யுடீயூப்பிலும் பலரும் பல லட்சங்கள் வரை சம்பாதிக்கின்றனர்.

ஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்!!

அந்தவகையில் மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக ஒன்றிப் போன யுடீயூப் இன்று சில நிமிடங்கள் மூடங்கிப் போனது, அதாவது அதனை ஓப்பன் செய்து பார்க்கையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இதனால் பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியாமல் போக, மிகவும் மெதுவாக லோட் ஆகுதல், பபர் ஆகுதல் என இருந்ததால் பயனர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் யுடீயூப் நிறுவனம் அதன் சேவையில் தடங்கல் ஏற்பட்டது குறித்து உறுதிப்படுத்தியதுடன், தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தது.

Related posts

இனி ஆடியோ மெசேஜை ஓபன் பண்ணவே வேண்டியதில்லை..

TechNews Tamil

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக அறிமுகமானது அமேசான் பே லேட்டர்!

TechNews Tamil

ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம்!!

TechNews Tamil