Apps

டிக் டாக்கினை ஒழித்துக் கட்ட வரவுள்ள You Tube இன் Shorts சேவை!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது  மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.

டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.

இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது.  இந்த செயலியானது ஆபாசங்களைப் பரப்புவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, டிக் டாக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

டிக் டாக்கினை ஒழித்துக் கட்ட வரவுள்ள You Tube இன் Shorts சேவை!!

பின்னர் அது மீண்டும் திருத்தப்பட்டு சில விதிமுறைகளுடன் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. டிக்டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்த டிக் டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ஷார்ட்ஸ் என்னும் ஒரு பொழுதுபோக்கு வீடியோக்களைக் கொண்ட சேவையினை யூடியுப்பில் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

மாதம் மாதம் பல மில்லியன் கணக்கிலான பயனர்களைக் அதிகமாகக் கொண்டுவரும் யூடியூப்பின் இந்த சேவையானது டிக்டாக்கை விட பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும்.

பாடல்கள், இசை, திரைப்படங்களின் வசனங்களும் போன்றவற்றினை யூடியூப் தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிக்டாக்கில் பாடல் மற்றும் இசையை பதிவிறக்கம் செய்வது கடினம் என்பதால், ஷார்ட்ஸ் சேவையானது பெரிய அளவில்  பெறும். இது மே மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

Related posts

டிக் டாக்கிற்கு அமெரிக்காவில் தடை இல்லை.. அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை!!

TechNews Tamil

பிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி?

TechNews Tamil

வாட்ஸ்ஆப்: இரண்டு போன்களில் இனி ஒரு அக்கௌண்ட்!

TechNews Tamil