வாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சிறப்பான பயன்களைக் கொண்ட புதிய அப்டேட்டுக்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.
தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஒரு மொபைல் எண்ணில் ஒரு வாட்ஸ் ஆப் அக்கௌண்ட் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்போது கிடைத்துள்ள புதிய அப்டேட்டின்படி பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போனில் ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் அக்கௌண்ட் ஓப்பன் செய்யும் பட்சத்தில், அதே எண்ணைக் கொண்ட மற்றொரு தொலைபேசியில் உள்நுழைவதற்கு முன் முதல் தொலைபேசியிலிருந்து அக்கௌண்ட்டை டெலிட் செய்வது கட்டாயமாகும்.
ஆனால் இந்த புதிய அம்சத்தின் மூலம், ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களிலிருந்து ஒரே கணக்கில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த புதிய அப்டேட் குறித்த தகவல்கள் WABetaInfo இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது.