டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஃபாஸ்ட் டேக் என்பது RFID தொழில்நுட்பத்தினைக் கொண்டு இயங்கும் கோடிங் கொண்ட ஸ்டிக்கர் ஆகும்.
இந்த ஸ்டிக்கர் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ளதால், டோல் கேட்டில் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும்போது, பணம் தானாக எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சேவையானது பயணிகளின் நேரம் வீணாவதை குறைக்க உதவும்.

FASTag கணக்குகளை பலரும் ஆன்லைனில் பல வகைகளில் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். தற்போது Google Pay பாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்ய UPI என்ற அம்சத்தினை பாஸ்டேக் அக்கௌண்ட்டில் இணைத்துள்ளது.
இதன்மூலம் பாஸ்டேக் அக்கௌண்டினை கூகுள் பே ஆப்புடன் இணைத்து ரீசார்ஜ் பண்ண வேண்டிய தேவை இருக்கும்போது எளிதில் செய்து கொள்ள முடியும்.
பயனர்கள் பலரும் பாஸ்டேக்கினை கூகுள் பேவுடன் இணைக்கும் அம்சத்தினை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்மூலம் மிகவும் எளிமையான முறையில் ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதால் பலரை கூகுள் பேவை, பாஸ்டேக் அக்கௌண்ட்டுடன் இணைத்துள்ளனர்.