இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பேடிஎம் மூலம் டிக்கெட் எடுக்கும் முறையினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இந்தியாவில் கொரோனாவானது மார்ச் மாதத்தில் கால்பதித்த நிலையில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி, மே 31 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மக்கள் பெரிய அளவில் பொருளாதார இழப்பினை சந்தித்தநிலையில், இந்த ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 5 வது கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், 4 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் 50 சதவீத பேருந்துகளை துவக்கியும் உள்ளனர்.
பயணர்கள் மாஸ்க் அணிதல், க்ளவுஸ் அணிதல், சானிடசைர் உபயோகப்படுத்துதல், சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் போன்றவற்றுடன் போக்குவரத்தானது துவங்கப்பட்டுள்ளது.
மேலும் பணம் கொடுத்து வாங்குதல் மூலம் கொரொனா நோய்த் தொற்று மேலும் தீவிரமாகப் பரவி விடக்கூடாது என்பதால், மின்னணு கட்டணம் மூலம் டிக்கெட் வசூலிக்கும் முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பேருந்துகளில் பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.