போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் ஆப் ஒரு புதிய சேவையினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதாவது பார்வேர்ட் மெசேஜ்களுக்கு லென்ஸ் வடிவிலான ஒரு பட்டன் காண்பிக்கப்படும். அந்த லென்ஸ் வடிவை கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பார்வேர்ட் மெசேஜ்ஜின் உண்மைத் தன்மை குறித்து தகவல்களை நம்மால் கண்டறிய முடியும்.
அதன்மூலம் வெப் மூலமாக அந்தத் தகவலானது உண்மையா அல்லது போலியானதா என்று கண்டறியலாம். இந்த நேரத்தில் வெளியான இந்த அம்சம் பாராட்டத்தக்கதாக உள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் ஆப் தற்போது மற்றுமொரு அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாட்களை/ குறுந்தகவல்களை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கு முன் ஐந்து பேருக்கு ஒரு செய்தியை அனுப்ப பயனர்களை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க குறைக்க முடியும். தற்போது ஊரடங்கினால் அனைவரும் முடங்கி இருக்கும் நிலையில் முன்பைவிட வாட்ஸ் ஆப்பின் பயன்பாடு தற்போது 50% அதிகரித்துள்ளது.
இந்த நேரத்தில் அதிக அளவிலான Forward மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் இந்த அம்சமானது தற்போது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.