Mobile

செப்டம்பர் 17ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் Redmi TV 70!

சியோமி நிறுவனத்தின் ஒரு புதிய தயாரிப்பின் அறிமுகத்தை ஒட்டி டீசர் உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இது வேறு எதுவுமல்ல Redmi TV 70 தான். செப்டம்பர் 17 அன்று ஒரு நிகழ்ச்சியின்போது இந்தியாவில் Redmi TV 70 அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட்மி டிவி 70-இன்ச் 4K திரை, HDR வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.

செப்டம்பர் 17ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் Redmi TV 70!

2GB RAM மற்றும் 16GB சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64 bit அம்லாஜிக் SoC  ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.

மேலும் வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு USB போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், AV input, என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இதனுடன் கூடுதலாக வாய்ஸ் ரிமோட்டும் வழங்கப்படுகிறது.

சீனாவில் அறிமுகமான இந்த டிவி சீனாவில் 38,000 ரூபாய்க்கு விற்பனையானது.

Related posts

புதிய நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறவுள்ள மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil