Redmi 8 இந்தியாவில் இன்று அறிமுகமானது. Redmi 7 இன் மேம்பட்ட அம்சமாக இது வெளிவருகிறது.
- Redmi 8-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி வகையின் விலை- 7,999
- Redmi 8-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வகையின் விலை – 8,999
மேலும் இது அக்டோபர் 12 சனிக்கிழமை நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், Android 9 Pie உடன் MIUI 10 இயங்கக்கூடியதாக உள்ளது. 6.22-inch HD உடன் Dot Notch display வினைக் கொண்டுள்ளது.
4 ஜிபி ரேம் வரையில் octa-core Qualcomm Snapdragon 439 SoC உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதிகளும் இதில் உள்ளது.
மேலும் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் Mi.com, Mi Home stores மற்றும் Flipkart போன்ற தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.