சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட சியோமி நிறுவனம் நாளை Mi Box 4 SE மற்றும் Mix Box S என்னும் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது சாதாரண டிவிக்களை மாற்றி ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கான கிப்ட்டாக இது இருக்கும்.
அதாவது இனி சாதாரண டிவியை கொடுத்துவிட்டு புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய தயாரிப்பின்மூலம் சாதாரண எந்த டிவியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும்.

எம்ஐ பாக்ஸ் எஸ் என்னும் இந்த ஸ்மார்ட் டிவியாக மாற்றும் தயாரிப்பானது உலகின் பல நாடுகளில் விற்கப்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் தலைவரான மனுக் குமார் ஜெயின் ட்விட்டரில் இதுகுறித்த வீடியோ டீஸரை வெளியிட்டதோடு, “பலரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சாதனமானது சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும்” என்று கூறினார். இந்த தயாரிப்பு எம்ஐ 10 உடன் இந்தியாவுக்கு வரப்போகிறது என்றார்.
Mi Box 4 SE என்னும் இந்த தயாரிப்பு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாடுகளிலும் அறிமுகத்தினை செய்து வருகின்றது.
சாதாரண டிவி கொண்டோரின் ஸ்மார்ட் டிவி கனவினை இந்தத் தயாரிப்பு நிறைவேற்றும் என்று கூறப்படுகின்றது.