Mobile

ஆகஸ்ட் 29 இல் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 8!!

ரெட்மி நோட் 7 எஸ் மற்றும் நோட் 7 ப்ரோ உள்ளிட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்களில் 48 எம்பி அளவிலான முதன்மை பின்புற கேமரா உள்ளது. எனவே, ரெட்மி நோட் 8 வரிசையின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஒப்பீட்டளவில் அதிக தெளிவுத்திறன் கொண்ட சென்சாரை நாம் எதிர்பார்க்கலாம்.


நிச்சயமாக ரெட்மி நோட் 8 ஆனது அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருக்கும். சீன ஒழுங்குமுறை வலைத்தளமான TENAA ஆனது ரெட்மி 8 ஆனது ஒரு 5,000 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆக, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் நாம் அதை எதிர்பார்க்கலாம். 

ஆகஸ்ட் 29 இல் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 8!!

சிப்செட்டை பொறுத்தவரை, வரவிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் ஆனது கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 90 கொண்டு இயக்கப்படலாம்.

இதன் டிஸ்பிளே அளவுகள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவில்லை என்றாலும் கூட, ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களில் காணப்படும் 6.3 இன்ச் அளவிலான பேனல்களை விட பெரிய டிஸ்பிளேக்களை கொண்டு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.  விலையானது ரூ.15,000/- இலிருந்து தொடங்கலாம்.

Related posts

செப்டம்பர் 17ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் Redmi TV 70!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள ஹானர் 20எஸ்!!

TechNews Tamil

அறிமுகமானது Oppo A91 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil