Mobile

அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

 சியோமி நிறுவனம் தற்போது புதிய சியோமி மி10 யூத் எடிஷன் 5ஜி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

இந்திய மதிப்பில் விலை விவரங்கள்:

  1. சியோமி மி10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.22,630
  2. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.24,800
  3. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.27,000
  4. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.30,150


அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் தற்போது 6.57 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED வாட்டர் டிராப் டிஸ்பிளேவினையும், மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகஉள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 5 ஜி எஸ்ஏ/ என்எஸ்ஏ / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 4160எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் Y9!

TechNews Tamil

அறிமுகமான சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ இன் அம்சங்கள்!

TechNews Tamil

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

TechNews Tamil