Gadgets

75 இஞ்ச் டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

சியோமி நிறுவனம் சமீபகாலமாக பல வகையான மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதிய 75-inch Mi Full-Screen TV Pro வினை அறிமுகம் செய்துள்ளது.

1.         Mi Full Screen TV Pro 75 inch இன் விலை – (இந்திய மதிப்பில்) ரூ.64,500

Mi Full Screen TV Pro 75 இஞ்ச் டிவி குறித்த விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

இந்த டிவியானது, 4 கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க வகையில் குறுகிய பெசில்கள் உள்ளன.

மேலும் இந்த டிவியானது 12nm ஃபின்ஃபெட் 1.9GHz 64-பிட் ஆக்டா கோர் செயலியினைக் கொண்டுள்ளது, மேலும் இது XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைப்பதாய் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த Mi Full Screen TV Pro 75-inch டிவியானது  2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாய் உள்ளது.

மேலும் இந்த டிவியானது பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குவதாய் உள்ளது.  இந்த ஸ்மார்ட் டிவியானது Youku, Tencent Video மற்றும் பல போன்ற pre-installed செயலிகளைக் கொண்டுள்ளது.

இந்த டிவியானது டால்பி ஆடியோ மற்றும் IoT சாதனங்களுடன் இணைவதற்கான ஆப்ஷன் கொண்டு உள்ளது

Related posts

32′ இன்ச் மற்றும் 43′ இன்ச் அளவுகளில் வெளியாகியுள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள்!!

TechNews Tamil

அறிமுகமானது லெனோவா குரோம்புக் 3 லேப்டாப்!

TechNews Tamil

ரூ. 16,999 விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!!

TechNews Tamil