நாம் வொயர்டு தொழில்நுட்பத்தில் இருந்து வொயர்லஸ் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறோம். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியாகப் பார்க்கப்படும் இந்த வொயர்லஸ் தொழில்நுட்பம் தற்போது மற்றொரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.
அதாவது இந்த சீனாவைத் தலைமை இடமாகக் கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்தான் சியோமி நிறுவனத்தால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பமாகும்.

அதாவது இந்த ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் எம்ஐ ஏர் சார்ஜ் என்று அழைக்கப்படுவதுடன், ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் அம்சத்தை வழங்குவதாய் உள்ளது.
ஒரு இடத்தில் இருக்கும் பயனர்கள் காற்றுவாக்கில் இரண்டு மீட்டர் அளவு வரையில் இந்த சார்ஜிங்க் தொழில்நுட்பத்தை அவர்களது சாதனத்திற்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.
இந்த காற்றுவாக்கில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போனில் வழங்கப்பட உள்ளதாக சியோமி அறிவித்துள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து, மற்ற சாதனங்களுக்கும் இந்த தொழில்நுட்பமானது வழங்கப்படும் என்றும் சியோமி அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளது.