சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் தற்போது எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச்சினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எம்ஐ வாட்ச் லைட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
எம்ஐ வாட்ச் லைட் சதுரங்க வடிவத்தில் ஆனதாகவும், மேலும் இந்த வாட்ச் ஆனது 1.4 இன்ச் கலர் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த எம்ஐ வாட்ச் லைட், வலதுபுறத்தில் பவர் பட்டன் வசதியினையும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த எம்ஐ வாட்ச் லைட்டினைப் பொறுத்தவரையில் சிறப்பு அம்சமாக 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 9 நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 20 வாட்ச் பேஸ்களுக்கான சப்போர்ட் மற்றும் எமோஜி சப்போர்ட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
இந்த எம்ஐ வாட்ச் லைட் ஆனது 230 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் கூடுதல் அம்சமாக மியூசிக் கண்ட்ரோல் வசதி, ஐடில் அலெர்ட்கள், கால், ஆப்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.