சியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, சில நாட்களுக்கு முன் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை வெளியிட்டது, அது வெளியான சில மணி நேரத்திலேயே வைரலானது.
குறிப்பாக சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களும் செங்குத்தாக உள்ளது, இதன் மெகாபிக்சல் பற்றிய விவரங்கள் பற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என்ற தகவலும் அப்போதே வெளியானது.
சியோமியின் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்று உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதில் இரட்டை தாழ் கொண்ட டிஸ்பிளே இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணி எதிர்காலத்தில் துவங்கும் என்றும் பின்பு ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது சியோமி நிறுவனம்.
வீடியோவில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது