Mobile

அறிமுகமாகவுள்ள சியோமியின் 100MP கேமிரா ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் கேமராவின் எதிர்காலத்தையே புரட்டிப்போடும் அளவிலான ஒரு தகவல், சியோமி முகாமில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அறிக்கை உண்மையாகும் பட்சத்தில், சியோமி நிறுவனம் கூடிய விரைவில் 100MP அல்லது 108MP கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தக்கூடும். 

சியோமி 100 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை ரஷ்ய வலைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தகவலை Weibo தனது பதிவின் மூலம், முன்னரே வெளிப்படுத்தி இருந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

அறிமுகமாகவுள்ள சியோமியின் 100MP  கேமிரா ஸ்மார்ட்போன்

இருப்பினும், இந்த 100MP கேமரா ஸ்மார்ட்போன் பற்றியும், இதில் Samsung ISOCELL sensor-கள் இடம்பெறுமா அல்லது பெறாதா என்பது பற்றியும் எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.


100MP கேமரா ஆனது சியோமியின் மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. மி மிக்ஸ் தொடரின் கடைசி ஸ்மார்ட்போன் ஆன மி மிக்ஸ் 3 ஆனது கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பட்டையை கிளப்பும் வசூலை வழங்கியதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆக ஒருவேளை சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் தான் சியோமி அதன் 64 எம்பி கேமரா வைக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அதை 100MP ஆக மாற்றிக்கொள்ளுங்கள்! 


Related posts

தங்கம், வைரத்தினால் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்!!

TechNews Tamil

ஜனவரி 25 ஆம் தேதி நோக்கியா கூறவுள்ள நற்செய்தி!!

TechNews Tamil