ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமானது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 29ம் தேதியில் விற்பனைக்கு வர உள்ளது
இந்த ரெட்மி ஸ்மார்போன் 6500 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளதால், பலரும் இது குறித்த விற்பனைத் தேதியினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்.ஐ. காம் இணையதளத்தில் விற்பனைக்கு வரும்.

இந்த சியோமி ரெட்மி 8ஏ இரண்டு சேமிப்பு அளவுகளில் வெளியாகிறது.
- 2ஜிபி +32ஜிபி அளவில் உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த போனின் விலை- ரூ. 6,499
- 3ஜிபி + 32ஜிபி அளவில் உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த போனின் விலை- ரூ. 6,999.
சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்.டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இது கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 ஐ பெற்றுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 12 எம்.பி. ரியர் கேமராவையும், 8 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இதில் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசர் உள்ளது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட் என்பதால், பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.