Mobile

ஸ்விட்சர்லாந்தில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் சியோமி எம்ஐ ஸ்மார்ட்போனை விரைவில் ஸ்விட்சர்லாந்தில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் லிக்விட் கூல் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 108 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப் சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  4600 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா பேசிக் மாடலிலும் இனி ஆண்ட்ராய்டு வசதி…

TechNews Tamil

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 28-ல் ஓப்போ ரெனோ 2, ரெனோ 2Z மற்றும் ரெனோ 2F!

TechNews Tamil