Mobile

சீனாவில் வெளியாகிய சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் இன்று வெளியாகி உள்ளது. இந்த சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், 19:5:9 திரைவிகிதம், எச்டிஆர் பிளஸ் ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. இயங்குதளம் எனக் கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

சீனாவில் வெளியாகிய சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 108எம்பி கேமரா சாம்சங் சென்சார் ஒஐஎஸ், 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

சியோமி மி 10எஸ் மெமரி அளவாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவாக 4780எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. இது 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் கொண்டதாக உள்ளது.

Related posts

ரூ.35,999யில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ.!

TechNews Tamil

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

TechNews Tamil

சுழலும் திரையுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil