Mobile

மார்ச் 15 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி மி 10 ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் கடந்த மாதம் 13 ஆம் தேதி சியோமி மி 10 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.

1.       8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை – ரூ.40,920

2.       8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை – ரூ.43,990

3.       12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை – ரூ.48,080

மார்ச் 15 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி மி 10 ஸ்மார்ட்போன்!!

சியோமி மி 10 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதி கொண்டுள்ளது.

 மேலும் இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வசதி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 108எம்பி மெயின் கேமரா, 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி சென்சார், 2எம்பி சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

சியோமி மி10 ஸ்மார்ட்போன் 4780எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ஆகஸ்ட் 27 இல் Mi A3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை!!

TechNews Tamil

விற்பனைக்குத் தயாரான ஐபோன் எஸ்இ 2020 மாடல்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil