Gadgets

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக சியோமி மி டிவி ஸ்டிக் அறிமுகம்!

சியோமி நிறுவனம் தற்போது  மி பாக்ஸ் 4கே ஸ்ட்ரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, அதாவது மி டிவி ஸ்டிக் எனப்படும் மிகச் சிறிய வீடியோ ஸ்ட்ரீமிங் தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மி டிவி ஸ்டிக் ஆனது கட்டைவிரல் அளவில்தான் உள்ளது. சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினைப் பெற்ற அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக இந்த ஸ்டிக் ஆனது களம் இறங்கியுள்ளது.

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக சியோமி மி டிவி ஸ்டிக் அறிமுகம்!

இந்த மி டிவி ஸ்டிக்  டால்பி மற்றும் DTS உடன் இயங்கும் சரவுண்ட் சவுண்ட் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது, மேலும்  கூகுள் அசிஸ்டென்ட் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது Chromecast ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த மி டிவி ஸ்டிக் ஆனது குவாட்-கோர் சிபயு மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது ப்ளூடூத் ரிமோட் கன்ட்ரோலர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்த மி பாக்ஸ் 4கே  கூகுள் அசிஸ்டன்ட், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிரைம் விடியோ போன்றவற்றிற்கான பட்டன்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 600fps இல் FHD தெளிவுத்திறன் வீடியோக்களையும் ஆதரிப்பதாகவும் உள்ளது.

Related posts

அதிரவைக்கும் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ்!!

TechNews Tamil

50 சேனல்களை கூடுதலாக வழங்கும் கேபிள் டிவி..!!

TechNews Tamil