சியோமி நிறுவனம் தற்போது மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விரைவில் உலகம் முழுவதிலும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகின்றது. இந்த டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவி 43 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியானது 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவி டி.வி.எஸ் 2.0 உடன் இரண்டு 8W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

இந்த சியோமி மி டிவி இ43கே ஆனது ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் கொண்டு இயங்குகிறது, இந்த ஸ்மார்ட் டிவியானது ப்ளூடூத் ரிமோட்டிற்கு மாற்ராக ஸ்டாண்டர்ட் இன்ப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளது.
சியோமி மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவி டூயல் கோர் ப்ராசஸர் மூலம் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீட் மற்றும் மாலி -450 எம்பி 2 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, இரண்டு எச்டிஎம், போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஏ.வி போர்ட். ஈதர்நெட் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.