Gadgets

நாளை விற்பனையினைத் துவக்கவுள்ள சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி!!

சியோமி நிறுவனம் தனது மி டிவி 4எக்ஸ் (Xiaomi Mi TV 4X) ஸ்மார்ட் டிவிக்களை நாளை இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த விற்பனையானது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

1.   43 இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை-  ரூ.24,999

இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இந்த டிவியானது 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

நாளை விற்பனையினைத் துவக்கவுள்ள சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி!!

இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் போன்ற ஆப் வசதிகளைக் கொண்டுள்ளது

மேலும் இந்த டிவியானது கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இந்த டிவியானது 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட், ஃபைல் மேனேஜர், பிளே மூவிஸ், மீடியா பிளேயர், டிவி மேனேஜர், லைவ் டிவி ஆப், டிவி Guide ஆப், எச்.265, போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டதாக உள்ளது. இந்த டிவியானது டால்பி மற்றும் DTS-HD ஆடியோ ஆதரவு மற்றும் 20வாட் ஸ்பீக்கர் வசதி கொண்டுள்ளது.

இந்த மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவியானது பேட்ச்வால் யுஐ உடன் ஆண்ட்ராய்டு 9பை வசதி  கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் இது டேட்டா சேவர் அம்சத்தைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஎம் போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக்,புளூடூத் 4.2, வைஃபை போன்றவற்றினைக் கொண்டு உள்ளது.

.

Related posts

சீனாவில் அறிமுகமானது ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப்!!

TechNews Tamil

நாளை அறிமுகமாகின்றது ரோபோ வேக்கம் கிளீனர்!!

TechNews Tamil

ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil