Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகின்றது.

சியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவினையும், 1.1 இன்ச் 126×294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 660 GPU மற்றும் 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி மற்றும் 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்,  256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு

சியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா என்னும்போது 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

சியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ , 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

விற்றுத் தீர்ந்த Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஜியோமி போன்கள்.!!

TechNews Tamil

வாராந்திர ஃபிளாஷ் விற்பனையில் Redmi 8!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் களம் இறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil