Mobile

சீனாவில் விரைவில் களமிறங்கவுள்ள சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் சியோமி மி 11 ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இந்த சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.81 இன்ச் 2கே WQHD AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1,440×3,200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 1500 nits பிரைட்நஸ் வசதி, 120Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டதாகவும், பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

சீனாவில் விரைவில் களமிறங்கவுள்ள சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் போன்றவற்றினையும் முன்புறத்தில் 20 எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினையும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  சியோமி மி 11 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் கிரே போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!

TechNews Tamil

வெளியானது Vivo S5 இன் அசத்தலான டீசர்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil