Mobile

இந்தியாவில் அறிமுகம் ஆன சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் அதன் எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 619 GPU, 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆன சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4820 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் இதுதான்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ஜனவரி 31 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil