Mobile

அதிரடியான அம்சங்களுடன் அறிமுகமான சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் தற்போது சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

1.       8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 ப்ரோ விலை – ரூ.51,150

2.       12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை – ரூ.56,270

3.       12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை – ரூ.61,370

சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

அதிரடியான அம்சங்களுடன் அறிமுகமான சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதி கொண்டுள்ளது.

 மேலும் இந்த சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வசதி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை இந்த சியோமி மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 108எம்பி மெயின் கேமரா, 20எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி கேமரா, 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

சியோமி மி10 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

TechNews Tamil

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 5 வருடங்கள் கழித்து Oppo A31!

TechNews Tamil

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

TechNews Tamil