Gadgets

சியோமி மீ கேமிங்க் லாப்டாப் 4 ஆம் தேதி வெளியீடு!

புதிய Xiaomi Mi Gaming Laptop ஆனது வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறியிருந்தது. அதன் பின்னர் சியோமி நிறுவனமே ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காத்திருக்கவும் என்று பல டீஸர்களை ஆன்லைனில் வெளியிட்டு, இந்த லேப்டாப்பின் இருப்பை உறுதி செய்தது.


வெளியான லீக்ஸ் தகவலின் படி, வரவிருக்கும் சியோமி மி கேமிங் லேப்டாப் ஆனது மொத்தம் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகும். வெளியாகும் அனைத்து வேரியண்ட்களுமே 144Hz Refresh Rate கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ஆகையால் முன்னர் வெளியான சியோமி நிறுவனத்தின் கேமிங் லேப்டாப்பில் காணப்பட்ட 15.6 இன்ச் டிஸ்பிளேவை இதிலும் எதிர்பார்க்கலாம். 

சியோமி மீ கேமிங்க் லாப்டாப் 4 ஆம் தேதி  வெளியீடு!

அறிமுகத்தை சந்திக்கும் மூன்று லேப்டாப்களில் இரண்டு வேரியண்ட்கள் ஆனது, DDR4 DRAM மற்றும் 512GB அளவிலான SSD உடனாக Ninth generation Intel Core i7 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இந்த இரண்டு வேரியண்ட்டில் ஒன்றானது, Nvidia GeForce RTX 2060 GPU-வை கொண்டிருக்க, மற்றொன்று Nvidia GeForce GTX 1660 Ti GPU-வை கொண்டிருக்கும். 


மூன்றாவது வேரியண்ட் ஆனது Ninth-generation Intel Core i5 ப்ராசஸர் உடனாக 8GB DDR4 DRAM மற்றும் 512GB SSD-ஐ கொண்டிருக்கும். இந்த வேரியண்ட் ஆனது Nvidia GeForce GTX 1660 Ti GPU-வை கொண்டிருக்கும். 


மொத்தத்தில், சியோமி நிறுவனத்திடம் இருந்து வரவிருக்கும் கேமிங் லேப்டாப் ஆனது பிரமாதமான ஒரு லேப்டாப் ஆக வெளியாகும் என்பது போல் தெரிகிறது.

Related posts

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. இன்று அறிமுகம்!!

TechNews Tamil

3 மாடல்களில் அறிமுகமானது மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்!!

TechNews Tamil