சியோமி நிறுவனம் அதன் எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியாகியுள்ளது.
எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனின் விலை- ரூ. 472 டாலர் (அமெரிக்க மதிப்பில்)
சியோமி எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். மேலும் இந்த லேப்டாப் ஆனது 14 இன்ச் 1920×1080 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

சியோமி எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் ஆனது இன்டெல் UHD கிராபிக்ஸ் 620 கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி DDR4 2666MHz ரேம் மற்றும் 256ஜிபி SATA எஸ்எஸ்டி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த லேப்டாப் ஆனது விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் இன் பில்ட் ஹெச்டி வெப்கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைபை, ப்ளூடூத் 5 கொண்டதாக உள்ளது.
மேலும் 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4b, 3.5எம்எம் ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக் கொண்டுள்ளது.
மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 46 வாட் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங், 65 வாட் அடாப்டர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.