சியோமி நிறுவனம் எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்தது. இந்த பிட்னஸ் பேண்ட் ஆனது ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்றும் கூறப்படுகிறது.
இந்த சியோமி எம்ஐ பேண்ட் 4சி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த பேண்ட் ஆனது 1.08 இன்ச் 128×220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது ப்ளூடூத் 5.0 இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் நேரம், இதய துடிப்பு விவரங்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை நாம் இதன்மூலம் பார்க்க இயலும்.

மேலும் இது 24/7 இதய துடிப்பை டிராக் செய்யும் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. எம்ஐ பேண்ட் 4சி மாடல் ஆனது அதிகபட்சமாக 14 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குவதாகவும் உள்ளது.
சியோமி எம்ஐ பேண்ட் 4சி மாடல் செடன்ட்டரி ரிமைன்டர், 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த பேண்ட் ஆனது 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும், 130 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.