மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது அதன் சியோமி மி 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த சியோமி மி 11 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.81 இன்ச் 2கே WQHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1,440×3,200 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் 1500 nits பிரைட்நஸ் வசதி கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த சியோமி மி 11 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த மி 11 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் போன்றவற்றினைக் கொண்டதாகவும் முன்புறத்தில் 20 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு கொண்டுள்ளது.