Mobile

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிவிப்பினை வெளியிட்ட சியோமி நிறுவனம்!!

ரெட்மி நோட் 9  ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமானது, அதனைத் தொடர்ந்து தற்போது இதன் விற்பனை ஜூலை 20ம் தேதி விற்பனைக்கு வர உள்ளதாக சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேல் MIUI 11 கொண்டு இயங்குவதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்ப்ளேவினையும், மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி வசதி கொண்டு உள்ளது.

ரெட்மி நோட் 9  ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிவிப்பினை வெளியிட்ட சியோமி நிறுவனம்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது Wi-Fi, USB Type-C port, Bluetooth, 3.5mm audio jack, NFC, GPS, A-GPS போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5,020 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

சீனாவில் மலிவு விலையில் அறிமுகமாகியுள்ளது ஹானர் 9A ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil