Gadgets

இந்தியாவில் வெளியான சியோமி 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் இந்தியாவில் மி 11 அல்ட்ரா டிவியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி 75 இன்ச் Mi QLED TV குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 75 இன்ச் Mi QLED TV மாடல் டிவியானது 4கே யுஎச்டி பேனல் ஆதரவும் 3,840 x 2,160 தெளிவுத்திறன் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் இருப்பதாக உள்ளது.

மேலும் இந்த டிவியானது டால்பி விஷன், எச்டிஆர் 10+ மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக உள்ளது.

சியோமி 75 இன்ச் Mi QLED TV மாடல் டிவி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

சியோமி 75 இன்ச் Mi QLED TV மாடல் டிவி 1.5ஜிகாஹெர்ட் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர் வசதியுடன் மாலி ஜி52 P2 GPU ஆதரவு கொண்டதாக உள்ளது.

சியோமி 75 இன்ச் டிவி மெமரி அளவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த டிவியானது 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் அலெக்ஸா மற்றும் டால்பி ஆடியோவைக் கொண்டுள்ளது.

மேலும் இது டால்பி அட்மோஸ் வசதி கொண்டதாகவும், இணைப்பு ஆதரவாக புளூடூத் 5.0, ஒரு HDMI 2.1 போர்ட், இரண்டு HDMI 2.0 போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது அசத்தலான ரெட்மிபுக் 16 லேப்டாப்!!

TechNews Tamil

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

TechNews Tamil

சோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.!!

TechNews Tamil