சியோமி நிறுவனம் அதன் எம்ஐ டிஸ்ப்ளே மானிட்டர் என்ற டிவியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
எம்ஐ டிஸ்ப்ளே 1 ஏ விலை – இந்திய மதிப்பில் ரூ.7500
இந்த டிவியானது 23.8 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியினைக் கொண்ட மானிட்டராக உள்ளது. 178 டிகிரி கோண பார்வை வசதியையும், புதிய காட்சி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.
இந்த டிவியானது மிஜியா ஸ்மார்ட் சாக்கெட் வசதியோடு 27W ஃபாஸ்ட் சார்ஜ் பதிப்பு கொண்டதாகவும், மூன்று யூ.எஸ்.பி-ஏ போர்ட்கள் கொண்டதாகவும் உள்ளது.
இந்த எம்ஐ டிஸ்ப்ளே 1 ஏ, 23.8 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவினையும், மேலும் இது 1,080×1,920 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 60 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு விகிதத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது. சியோமி மிஜியா ஸ்மார்ட் சாக்கெட் 27W ஃபாஸ்ட் சார்ஜ் ஸ்மார்ட் சாக்கெட்டையும் கொண்டுள்ளது.
மூன்று யூ.எஸ்.பி-ஏ போர்ட்கள், மூன்று ஸ்டாண்டர்ட் சார்ஜிங் சாக்கெட்டுகளும் கொண்டுள்ளது. மேலும் சிறந்த வெளியீட்டு சக்தியோடு இயக்க ஸ்மார்ட் சார்ஜிங் சிப் கொண்டுள்ளது.
ஷார்ட் சர்க்யூட்டைத் தடுக்க ஆட்டோ சுவிட்ச் ஆஃப், ஆட்டோ கட் ஆஃப் போன்ற வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.