Mobile

அசத்தலான அம்சங்களுடன் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மேலும் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

இது 4250 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

TechNews Tamil

இந்தியாவில் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil