Gadgets

பட்ஜெட் விலையில் விற்பனைக்குத் தயாரான வு ஸ்மார்ட் டிவிக்கள்!

சாம்சங்க், சோனி போன்ற நிறுவனங்களுக்கு ஈடாக வு நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களை வெளியிட்டு வருகிறது.

வு ஸ்மார்ட் டிவிக்கள் மிகவும் மலிவு விலையில் விற்பனையாவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பிரபலமானது.

வு 32 இன்ச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை – ரூ.10,999

வு 43 இன்ச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை – ரூ.19,999

பட்ஜெட் விலையில் விற்பனைக்குத் தயாரான வு ஸ்மார்ட் டிவிக்கள்!

வு டிவியானது 32 இன்ச் டிவி மற்றும் 43 இன்ச் டிவி என்ற இரண்டு வகைகளில் விற்பனை ஆகிறது.

32 இன்ச் பிரீமியம் டிவியானது எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியானது 20வாட் ஸ்பீகர் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மற்றொரு டிவியான 43 இன்ச் பிரீமியம் டிவி புல் எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மற்றொரு ஸ்மார்ட் டிவியானது 24வாட் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது.

ஆடியோ வசதியினைப் பொறுத்தவரை இந்த டிவியானது, டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்டு வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த புதிய வு ஸ்மார்ட் டிவி 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி  கொண்டுள்ளது.

மேலும் இது ஆப்டிகல் அவுட், ஆர்எஃப் போர்ட், ஹெட் ஜாக் போர்ட், இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், லேன், ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது

Related posts

இந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.!

TechNews Tamil

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல்!

TechNews Tamil