உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனைத் தளங்களில் ஒன்றான அமேசான் தற்போது உலகின் பலநாடுகளில் இதன் சேவைகளை வழங்கி வருகிறது, அதாவது அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது அசுர வளர்ச்சியினை எட்டியுள்ளது.
மேலும் இது அதன் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது சலுகைகளை வழங்கியே தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது, அந்தவகையில் தீபாவளி சலுகை, பொங்கல் சலுகைகள், சுதந்திரதின சலுகைகள், குடியரசு தின சலுகைகள், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் சலுகைகள், மாதாந்திர சலுகைகள், கோடைகால சலுகைகள் என வழங்குவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது இந்தியாவில் சம்பள நாள் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இந்த அமேசானின் சம்பள நாட்கள் சலுகையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 60 சதவீதம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது அமேசான் சம்பள நாட்கள் சலுகையாக ஜூலை 1 முதல் 3 வரை வழங்குகிறது. இந்த சம்பள நாட்களுக்கான சலுகைகளானது வாவ் சேலரி டேஸ் (WOW SALARY DAYS) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் அமேசான் தற்காலிகமாக 2 மாதங்களுக்கும் மேல் செயல்படாத நிலையில் எந்தவிதமான சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை, இந்த நிலையில் தற்போது அமேசான் மீண்டும் சலுகைகளை வழங்க எண்ணி சம்பள நாட்களுக்கான சலுகையினை வழங்கியுள்ளது.