Apps

வதந்திகளைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள சேவை!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 3,36,000 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 14,641 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஹலோ ஆப் போன்ற மிக முக்கிய தளங்களில் அதிக அளவில் வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது.

இதனால் மக்கள் அதிக அளவில் பீதியாகி உள்ளனர், மக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் குறித்த போலியான செய்திகளை நீக்கக்கோரி, இணைய தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா குறித்த உண்மை நிலவரங்களைப் பதிவிடும் பொருட்டு மத்திய அரசு MyGov Corona Helpdesk என்ற ஆப்பினைத் துவக்கியது.

வதந்திகளைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள சேவை!!

இது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்டோர் குறித்த உண்மைத் தகவல்களை வழங்கி வருகிறது.

இந்தவகையில் உலக சுகாதார அமைப்பு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து, வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் தளத்தில் புதிய சுகாதார எச்சரிக்கையை அறிவிக்க என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

WHO ஹெல்த் எச்சரிக்கையைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற வேண்டுமெனில், +41798931892 என்ற எண்ணை சேமித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் Whatsapp.com/coronavirus என்ற வலைத்தளம் மூலம் வாட்ஸ்அப் கொரோனா வைரஸ் தகவல் மையத்தையும் பார்வையிட முடியும்.

இந்த சேவையின் மூலம் போலித் தகவல்கள் பரவுவது ஓரளவு தடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Related posts

இனி கூகுள் அசிஸ்டன்ட்டின் மூலம் வாய்ஸ் ஆர்டர்கள்

TechNews Tamil

Flipkart Big Diwali Sale.. ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி!

TechNews Tamil

விரைவில் விலை ஏறும் ஜியோவின் ரீசார்ஜ் கட்டணங்கள்!!

TechNews Tamil